Connect with us

தொழில்நுட்பம்

புதிய வசதிகள் மற்றும் மாற்றங்களுடன் வெளியானது IPhone 17 சீரிஸ்

Published

on

Loading

புதிய வசதிகள் மற்றும் மாற்றங்களுடன் வெளியானது IPhone 17 சீரிஸ்

ஆப்பிள் நிறுவனம் தனது ‘Awe Dropping’ நிகழ்வில், புத்தம் புதிய ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை வெளியிட்டது. புதிய ஐபோன் மாடல்கள் கடந்த ஆண்டு வெளியான A18 சிப்செட்டின் மேம்பட்ட வெர்ஷன் மற்றும் ஐஓஎஸ் 26 கொண்டிருக்கிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் தனியுரிம செயற்கை நுண்ணறிவு (AI) சேவையான ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் (Apple Intelligence) ஆதரவையும் கொண்டுள்ளது.

ஐபோன் 17 அம்சங்கள்:

Advertisement

முற்றிலும் புதிய ஐபோன் 17 மாடல் ஐஒஎஸ் கொண்டிருக்கிறது. இந்த ஐபோன் மாடல் டூயல் சிம் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை, ஐபோன் 17 மாடலில் இரட்டை பின்புற சென்சார்களுடன் வருகிறது. இதில் f/1.6, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 48MP பியூஷன் பிரைமரி கேமரா உள்ளது. இந்த 2X டெலிஃபோட்டோ கேமராவாகவும் செயல்படும். இதனுடன் f/2.2, மேக்ரோ ஆப்ஷன் கொண்ட 48MP பியூஷன் அல்ட்ரா-வைடு கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், முற்றிலும் புதிய 18MP சென்டர் ஸ்டேஜ் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐபோன் 17 மாடல் A19 சிப்செட் மற்றும் iOS 26 இல் இயங்குகிறது. இது 16-கோர் நியூரல் எஞ்சினைக் கொண்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் ஆப்பிள் ஸ்டோரேஜையும் அதிகரித்துள்ளது. அதன்படி ஐபோன் 17 பேஸ் மாடலில் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இது ப்ரோ மாடல்களைப் போலவே அதே ஆப்பிள் இண்டெலிஜன்ஸ் அம்சங்களுடன் வருகிறது.

Advertisement

ஐபோன் 17 ப்ரோ, 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்:

ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் அலுமினிய கட்டமைப்பை கொண்டுள்ளன. அதாவது இந்த ஆண்டு மாடல்களில் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் காணப்படும் டைட்டானியம் பாடி இருக்காது. ஐபோன் 17 ப்ரோ மாடலில் 120 ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் 6.3 இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. ப்ரோ சீரிசில் இரண்டு மாடல்களும் 3,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளன. ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் புதிய A19 ப்ரோ சிப்செட் கொண்டுள்ளன. இது 6-கோர் CPU மற்றும் 6-கோர் GPU கட்டமைப்போடு வருகிறது, ஒவ்வொரு GPU கோர் நியூரல் ஆக்சிலரேட்டர்களை கொண்டுள்ளது.

Advertisement

கேமராக்களைப் பொறுத்தவரை, ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது. முன்புறம் 18MP கேமராவுடன் வருகிறது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஐஓஎஸ் 26 கொண்டிருக்கின்றன.

அதேவேளை நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசிய மோடி, ஜெருசலத்தில் 6 இஸ்ரேலியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவித்திருந்ததுடன், தாம் இஸ்ரேலுடன் நிற்பதாக கூறியிருந்தார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன