இந்தியா
பாரதியார் நினைவு நாளில் புதுவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மலர் தூவி மரியாதை
பாரதியார் நினைவு நாளில் புதுவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மலர் தூவி மரியாதை
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு இல்லம் மற்றும் அருங்காட்சியகத்தில் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வியாழக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு இல்லம் மற்றும் அருங்காட்சியகத்தில் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று (11.09.2025) மலர் தூவி மரியாதை செலுத்தினார். பாரதியார் பாடல்களுக்கு குழந்தைகள் நிகழ்த்திய நாட்டியாஞ்சலி மற்றும் பாரதியார் பாடல்களை கண்டு களித்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன், குடிமை பொருள் வழங்கல் அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் கலை பண்பாட்டுத் துறைச் செயலர், மற்றும் செய்தித் துறை இயக்குநர் ஆகியோர் உடன் இருந்தனர்.அதனை தொடர்ந்து, பாரதி பூங்காவில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ந.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு க.லட்சுமி நாராயணன், குடிமை பொருள் வழங்கல் அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் கலை பண்பாட்டுத் துறைச் செயலர் ஆகியோர் உடன் இருந்தனர்.
