இலங்கை
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்!

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்!
யாழ்.வட்டுக்கோட்டையில் 5 பனை மர குற்றிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை தபால் நிலயத்திற்கு அருகே வைத்து சந்தேக நபர் இன்றையதினம் (04-12-2024) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் பனை மரக் குற்றிகளை அனுமதிப்பத்திரம் இன்றி கடத்திச் செல்வதாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.