இலங்கை
யாழ்.சுழிபுரத்தில் திருடப்பட்ட பெறுமதியான கைபேசி… சிக்கிய சந்தேக நபர்!

யாழ்.சுழிபுரத்தில் திருடப்பட்ட பெறுமதியான கைபேசி… சிக்கிய சந்தேக நபர்!
யாழ்.வட்டுக்கோட்டையில் உள்ள சுழிபுரம் பகுதியில் ஒருவருடைய 45ஆயிரம் ரூபா பெறுமதியான கைப்பேசி ஒன்று சில தினங்களுக்கு முன் களவாடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்றையதினம் (03-12-2024) கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.