Connect with us

இந்தியா

சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை விசாரித்து கைது செய்த ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்

Published

on

Chandrababu-Naidu xy

Loading

சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை விசாரித்து கைது செய்த ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் சி.ஐ.டி போலீஸ் கூடுதல் தலைமை இயக்குநர் (ஏ.டி.ஜி.பி) மற்றும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி என் சஞ்ஜய்யிடம் விஜிலென்ஸ் மற்றும் அமலாக்கப் பிரிவு (வி&இ) பிரிவின் விசாரணை நடத்திய பிறகு, ஆந்திர மாநில பேரிடர் மீட்பு நடவடிக்கை மற்றும் தீயணைப்பு பணிகள் இயக்குநராக இருந்தபோது ரூ.1 கோடி முறைகேடு செய்ததாகக் கண்டறியப்பட்டு ஆந்திரப் பிரதேச அரசு அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.ஆங்கிலத்தில் படிக்க: IPS officer who probed case against CM Chandrababu Naidu and oversaw his arrest suspended1996-ம் ஆண்டு தேர்வான ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்ஜய், சி.ஐ.டி போலீஸ் தலைவராக ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த ஊழல் உள்ளிட்ட சில உயர்மட்ட வழக்குகளை விசாரித்தார், அதில் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் என். சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டப்பட்டார்.கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி, நந்தியாலில் சி.ஐ.டி அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவை கைது செய்த நடவடிக்கையை சஞ்ஜய் மேற்பார்வையிட்டார்.விஜிலென்ஸ் மற்றும் அமலாக்க அறிக்கையில், அவர் ஆந்திர மாநில பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் தீயணைப்பு சேவையில் பணிபுரிந்த போது, ​​சஞ்ஜய் ஒரு இணைய போர்டல் மற்றும் ஹார்டுவேர் சப்ளைக்காக டெண்டர் எடுத்தார். மேலும், விஜயவாடாவை தளமாகக் கொண்ட சவுத்ரிகா டெக்னாலஜிஸ் அண்ட் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 14 சதவீத வேலையை மட்டுமே முடித்திருந்தாலும், அந்நிறுவனத்துக்கு பணம் செலுத்தினார் என்று கூறியுள்ளது.மேலும், ஐதராபாத்தைச் சேர்ந்த கிருத்வ்யாப் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நடத்திய எஸ்சி, எஸ்டி விழிப்புணர்வு பயிலரங்குக்கு சஞ்ஜய் ரூ. 59,52,500 மற்றும் ரூ.59,51,500 செலுத்தியதாகவும் இந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், விசாரணையில், ஐதராபாத்தில் அத்தகைய நிறுவனம் இல்லை என்றாலும், பட்டியலிடப்பட்ட முகவரியில் சவுத்ரிகா டெக்னாலஜிஸ் மற்றும் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் அலுவலகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன