இந்தியா
இந்தியாவின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு
இந்தியாவின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு
இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். செப்டம்பர் 12 ஆம் தேதி காலை 10 மணியளவில் குடியரசுத் தலைவர் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தலில் 67 வயதான சி.பி ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சி வேட்பாளர் பி. சுதர்ஷன் ரெட்டியை 152 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.ஜூலை 21 ஆம் தேதி அப்போதைய குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர் உடல்நலக் குறைவால் திடீரென ராஜினாமா செய்ததால் தேர்தல் அவசியம் ஏற்பட்டது. குடியரசு துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக இந்த விழாவில் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டு, பொது வெளியில் தோன்றினார்.பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னாள் துணை ஜனாதிபதிகள் ஹமீத் அன்சாரி மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.கூடுதல் தகவல்கள்: பி.டி.ஐ
