உலகம்
ஜப்பானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் – போக்குவரத்து பாதிப்பு!
ஜப்பானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் – போக்குவரத்து பாதிப்பு!
ஜப்பானின் டோக்கியோவின் பல பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக துறைமுகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல கொள்கலன்கள் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனமழை காரணமாக டோக்கியோவில் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன, இதனால் சுமார் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டோக்கியோவின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும் நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
