இந்தியா
விசா காலம் முடிந்த அமெரிக்கர்கள்: சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்த புதுச்சேரி போலீசார்
விசா காலம் முடிந்த அமெரிக்கர்கள்: சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்த புதுச்சேரி போலீசார்
புதுச்சேரியில், விசா காலம் முடிந்து ஆரோவில் பகுதியில் தங்கியிருந்த அமெரிக்கர் இருவரை அமெரிக்கா நாட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்புதுச்சேரி வானூர் தாலுகா ஆரோவில் அருகே உள்ள குதிரை பண்ணை அருகில் இடையஞ்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல். இவருக்கு சொந்தமான இடத்தில் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த டக்ளஸ் பால் மேக்லனி (51) மற்றும் டோனி லூ டிக்கி (64) ஆக இருவரும் கடந்த சில மாதங்களாக வாடகை எடுத்து தங்கி இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே புதுச்சேரி மாநிலம் குருசுகுப்பம் பகுதியில் 2017 ஆம் ஆண்டிலிருந்து குடியிருந்து அங்கிருந்து மாற்றமாகி இடைஞ்சாவடி பகுதியில் ஒரு வருடமாக தங்கி வந்துள்ளனர்.அப்பொழுது வீட்டின் உரிமையாளரிடம் ஏற்கனவே ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றதாகவும் இங்கு வந்து வங்கிப் பணியில் ஆன்லைன் மூலம் வேலை செய்வது வருவதாகவும் கூறி மாத வாடகை ரூபாய் 60 ஆயிரம் கொடுத்து தங்கியிருந்தனர். ஆனால் இவர்கள் இருவரும் வீசா முடிந்து நீட்டிப்பு செய்யாமலேயே தங்கி இருந்தது புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது. இவர்களை தேடி வந்து ஆரோவில் காவல் நிலையத்தில் தகவல் தந்தது.அதன்பேரில் ஆரோவில் போலீசாரும் அங்கு சென்று குடியிருந்த வீட்டை சோதனை செய்து இவருடமும் விசாரணை நடத்தினர். அப்பொழுது அவர்கள் வைத்திருந்த விசா முடிந்தது தெரிய வந்தது. அதை எடுத்து இருவரையும் அந்நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர் அதன்படி இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து செல்ல புதுச்சேரி டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சென்னை ஏர்போர்ட்டில் சிறப்பு விசா கொடுக்கப்பட்டு அவர்களை அமெரிக்கா அனுப்பி வைக்கிறார்பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
