இலங்கை
வவுனியாவில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பப்பாசி செய்கை! இழப்பீடு கோரி நிற்கும் விவசாயிகள்

வவுனியாவில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பப்பாசி செய்கை! இழப்பீடு கோரி நிற்கும் விவசாயிகள்
வவுனியா வடக்கில் அண்மையில் பெய்த அடைமழை காரணமாக பப்பாசி செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தமது பப்பாசி தோட்டங்களை இழந்து நிற்கதியாகியுள்ளார்கள்.
மழை மற்றும் காற்றினால் தோட்டங்கள் பாதிக்கப்பட்டு அறுபடை செய்வதற்கு தயாரான பப்பாசிதோட்டங்கள், அறுபடை செய்யப்பட்டு கொண்டிருந்த தோட்டங்கள் முற்ராக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் பல லட்சம் ரூபாய்களை இழந்து மீழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
எனவே இது தொடர்பில் விவசாயத்திணைக்களம்,கமநல அபிவிருத்தி திணைக்களம், பிரதேசசெயலகம், வவுனியா மாவட்ட செயலகம், ஆகியவற்றின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தரவுகளைபெற்று தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள விவசாய அமைச்சறுக்கு தரவுகளை வழங்கி பப்பாசி செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுக்கான அரச நிதியுதவியினை பெற்றுத்தருமாறு வவுனியா வடக்கு விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் .
செந்தூரன்.0771073119