Connect with us

விளையாட்டு

2-வது முறையாக சாம்பியன் வாகை சூடிய வைஷாலி: கேண்டிடேட் செஸ் போட்டிக்கு தகுதி

Published

on

Vaishali defends title at FIDE Grand Swiss qualifies for Women Candidates 2026 Tamil News

Loading

2-வது முறையாக சாம்பியன் வாகை சூடிய வைஷாலி: கேண்டிடேட் செஸ் போட்டிக்கு தகுதி

ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 10-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் ஓபன் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நிமனை எதிர்கொண்டார். கருப்புநிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 38-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ் 42-வது நகர்த்தலில் கேப்ரியல் சர்கிஸ்சியனை (அர்மெனியா) தோற்கடித்தார். அர்ஜூன் எரிகைசி (இந்தியா)- யூ யாங்யி (சீனா) இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்நிலையில், இந்தத் தொடருக்கான மகளிர் பிரிவில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய தமிழக வீராங்கனை ஆர்.வைஷாலி 42-வது நகர்த்தலில் மரியா முசிச்சுக்கை (உக்ரைன்) வீழ்த்தி 6-வது வெற்றியை ருசித்தார். இதே போல் இந்தியாவின் வந்திகா அகர்வால், மைலி ஜேட் ஓவெலெட்டை (கனடா) வென்றார். இன்னும் ஒரு சுற்று எஞ்சி இருக்கும் நிலையில் மகளிர் பிரிவில் வைஷாலி, கேத்ரினோ லாக்னோ (ரஷியா) தலா 7½ புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். இந்நிலையில், யார் சாம்பியன் என்பதை உறுதி செய்யும் கடைசி சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் வைஷாலி சீனாவின் டான் ஜோங்ஜியுடன் மோதினார். 11 சுற்று முடிவில் 8 புள்ளிகள் பெற்று வைஷாலி சாம்பியன் ஆனார். இதன் மூலம் இந்த பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது முறை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இந்தியாவை சேர்ந்த கொனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் ஏற்கனவே கேண்டிடேட் செஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், 3-வது நபராக வைஷாலியும் அந்தப் பட்டியலில் இணைந்து அசத்தி இருக்கிறார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன