வணிகம்
வருமான வரி கணக்கு தாக்கல்: கடைசி நாளில் முடங்கிய இ-ஃபைலிங் போர்ட்டல்! இன்று (செப். 16) ஒருநாள் அவகாசம் நீட்டிப்பு
வருமான வரி கணக்கு தாக்கல்: கடைசி நாளில் முடங்கிய இ-ஃபைலிங் போர்ட்டல்! இன்று (செப். 16) ஒருநாள் அவகாசம் நீட்டிப்பு
வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு இன்று ஒருநாள் (செப்டம்பர் 16) அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகளால் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட சிரமங்களே இந்த அவகாச நீட்டிப்புக்குக் காரணம். செப்டம்பர் 15, 2025, 2025-26-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக இருந்தது. அதே நாளில், நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாவது காலாண்டு அட்வான்ஸ் வரியைச் செலுத்துவதற்கான கடைசி நாளாகவும் இருந்தது.இந்த முறை, செப்டம்பர் 15 வரை 7.3 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் (ITRs) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 7.28 கோடி கணக்குகளைவிட அதிகம். இது வரி செலுத்துவோரின் பொறுப்புணர்வையும், வரி தளத்தின் வளர்ச்சியையும் காட்டுகிறது.தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்பட்ட குழப்பம்!செப்டம்பர் 15 அன்று, வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டல் அதிக ட்ராஃபிக்கால் ஸ்தம்பித்தது. பல வரி செலுத்துவோர் மற்றும் பட்டயக் கணக்காளர்கள் உள்நுழைய முடியாமலும், வரி செலுத்த முடியாமலும், வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) பதிவிறக்கம் செய்ய முடியாமலும் சிரமப்பட்டனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல புகார்கள் எழுந்தன. வரித் துறை, சில சமயங்களில் பிரவுசர் சிக்கல்களால் இப்படி நடக்கலாம் என்றும், கேஷை கிளியர் செய்யுமாறும் அறிவுறுத்தியது. ஆனால், பலரும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றியும் சிரமங்கள் தொடர்ந்தன. இதன் விளைவாக, வரி செலுத்துவோர் கூடுதல் அவகாசம் கேட்டனர்.A record 7.3 crore+ ITRs have been filed till 15th Sept 2025, surpassing last year’s 7.28 crore.We sincerely thank taxpayers & professionals for their timely compliance.To facilitate further filings of ITRs, the due date has been extended by one day (16th September 2025). pic.twitter.com/v1iykwFNKPஇதையடுத்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இந்தச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு நாள் நீட்டித்து, செப்டம்பர் 16, 2025 வரை அவகாசம் அளிப்பதாக அறிவித்தது.இதனிடையே, செப்டம்பர் 16-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை இணையதளம் பராமரிப்பு பணிக்காக செயல்படாது என்றும், வரி செலுத்துவோர் அதற்குள் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
