சினிமா
இயக்குநரை திருமணம் செய்யும் ரவீனா!

இயக்குநரை திருமணம் செய்யும் ரவீனா!
நடிகை ரவீனா ரவி விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.
டப்பிங் கலைஞராக இருந்து நடிகையாக உயர்ந்தவர் ரவீனா. முக்கியமாக, சமந்தா, எமி ஜாக்சன், காஜல் அகர்வால், மடோன்னா செபாஸ்டியன் உள்ளிட்ட தமிழ், மலையாளப் படங்களில் பல முன்னணி நாயகிகளுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர். இறுதியாக, ஜவான் படத்திற்காக நடிகை தீபிகா படுகோனுக்கு தமிழ்க் குரல் கொடுத்திருந்தார்.
நடிகையாகவும் லவ் டுடே, மாமன்னன், வட்டார வழக்கு உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றவர்.
இந்த நிலையில், ரவீனா திருமணம் செய்ய உள்ளதை அறிவித்துள்ளார். மலையாளத்தில், ‘வாலாட்டி’ என்கிற படத்தை இயக்கிய தேவன் ஜெயக்குமாருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “எப்போதும் உடனிருக்கும் ஒன்றை நாங்கள் இருவரும் கண்டுபிடித்திருக்கிறோம். எங்களின் கதையை எழுதத் துவங்குகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், இருவரும் திருமணம் செய்யவுள்ளது உறுதியாகியுள்ளது. இயக்குநரை திருமணம் செய்யும் ரவீனாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.