இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனம் கிடையாது!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனம் கிடையாது!
இலங்கையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்படாது எனவும்
மக்களின் வரிப்பணம் விரயமாவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்றையதினம் நடைபெற்ற நிலையில்
175 புதிய உறுப்பினர்கள் முதன்முறையாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
கடந்த கால அரசாங்களில் அமைச்சுக்களின் செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை அதிசொகுசு வாகனங்கள் வழங்கப்படுவதுடன், பெருந்தொகை மக்களின் வரிப்பணம் செலவிட்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.[ஒ]