தொழில்நுட்பம்
ஃபேன்ஸி போன் நம்பர் வாங்குவதில் ஆர்வமுள்ளவரா? 1800 நம்பர்களை ஏலத்தில் அறிவித்தது BSNL

ஃபேன்ஸி போன் நம்பர் வாங்குவதில் ஆர்வமுள்ளவரா? 1800 நம்பர்களை ஏலத்தில் அறிவித்தது BSNL
ஃபேன்ஸி போன் நம்பர்களை வாங்குவதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் உங்களுக்காக BSNL 1802 ஃபேன்ஸி நம்பர்களை ஏலத்தில் அறிவித்துள்ளது.
விருப்பமுள்ளவர்களின் பி.எஸ்.என்.எல். –இன் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று ஏலத்தின் மூலம் நம்பர்களை வாங்கிக் கொள்ளலாம். 9499000111, 9499006006, 9498000123, 9445911119, 9445000030, 9499009009, 9499033033, 9445113113, 9445555990, 9499000555 என்பது உள்ளிட்ட பல ஃபேன்ஸி நம்பர்கள் இந்த ஏலத்திற்கு வந்துள்ளன.
ஃபேன்ஸி நம்பர்களுக்கான ஏலம் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஏலம் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் தொடங்குவோர், தொழில் நிறுவனங்களை நடத்தி வருவோர், தங்களது பிராண்டுகளை விளம்பரப்படுத்துவோர் உள்ளிட்டவர்களுக்கு இந்த ஃபேன்ஸி நம்பர்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
இந்த நம்பர்களுக்கான ஏலத் தொகை ரூ. 2 ஆயிரத்திலிருந்து தொடங்கி ரூ. 50 ஆயிரம் வரை இருக்கும் என பி.எஸ்.என்.எல் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
விருப்பமுள்ளவர்கள்
https://www.bsnl.co.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று ஏலத்தில் பங்கேற்கலாம்.