Connect with us

பொழுதுபோக்கு

“அவ ஃபேஸு அடடடடா…”: தங்கமே பாடலுக்கு வைப் செய்த நயன்தாரா மகன்கள்!

Published

on

Nayanthara babies

Loading

“அவ ஃபேஸு அடடடடா…”: தங்கமே பாடலுக்கு வைப் செய்த நயன்தாரா மகன்கள்!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் குழந்தைகள், நானும் ரவுடி தான் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தங்கமே’ பாடலை க்யூட்டாக பாடிய வீடியோ இணையத்தில் வலம் வருகிறது.தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் சினிமாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடித்து வருகிறார். இதனிடையே, கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். அப்படத்தில் முதன்மையான பாத்திரத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அப்போது, இருவருக்கும் இடையே காதல் உருவானது.இதைத் தொடர்ந்து, 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் இருவரும்  2022-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். மகாபலிபுரம் அருகேயுள்ள ஒரு ரிசார்டில் இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷாருக்கான் போன்ற நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.மேலும், இவர்களது திருமணம் மற்றும் நயன்தாராவின் வாழ்க்கை தொடர்பான ஆவணப்படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. இதில் ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்த தடையில்லா சான்று வழங்குவது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே மோதல் வெடித்தது சர்ச்சையை கிளப்பியது.முன்னதாக, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் வாடகைத் தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றனர். அவர்களுக்கு உலக் மற்றும் உயிர் என பெயரிட்டு வளர்த்து வருகின்றனர். இக்குழந்தைகளின் வீடியோவை அடிக்கடி விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில், ‘நானும் ரவுடி தான்’ படத்தில் இடம்பெற்ற ‘தங்கமே’ பாடலை இக்குழந்தைகள் பாடிய வீடியோவை, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது. A post shared by Vignesh Shivan (@wikkiofficial) “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன