விளையாட்டு
இடைநடுவில் நாடு திரும்பும் கெளதம் கம்பீர்!

இடைநடுவில் நாடு திரும்பும் கெளதம் கம்பீர்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர், குடும்ப அவசரநிலை காரணமாக பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தின் இடைநடுவில் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இந்தியாவின் வரலாற்று வெற்றியின் பின்னர், அடிலெய்டில் டிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் மீண்டும் அணியில் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேர்த்தில் நேற்று நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இந்தியா 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து, இரண்டு நாள் பிங்க்-பால் சுற்றுப்பயண ஆட்டத்திற்காக இந்திய அணி புதன்கிழமை கான்பெர்ரா செல்ல உள்ளதாகவும், எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகும் இப்பயிற்சி ஆட்டத்தில் கெளதம் கம்பீர் அணியில் இடம்பெற மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.