விளையாட்டு
இந்தியா – அவுஸ்திரேலியா முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று

இந்தியா – அவுஸ்திரேலியா முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்றையதினம் தொடங்குகிறது.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதன் முதல் டெஸ்ட் போட்டி பேர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாததால் இந்திய அணியானது வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் களமிறங்ககியமை குறிப்பிடத்தக்கது.