Connect with us

தொழில்நுட்பம்

உங்கள் ஆதாரை யாராவது தவறாக பயன்படுத்துகிறார்களா..? கண்டுபிடிப்பது எப்படி? – முழு விவரம் இதோ!

Published

on

Loading

உங்கள் ஆதாரை யாராவது தவறாக பயன்படுத்துகிறார்களா..? கண்டுபிடிப்பது எப்படி? – முழு விவரம் இதோ!

இந்தியர்களுக்கு ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியான அடையாள ஆவணமாகும். இருப்பினும், அதனுடன் இணைக்கப்பட்ட தகவல்களை வைத்து பல ஆதார் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. எனவே உங்கள் ஆதாரை யாராவது தவறாகப் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க உதவும் படிப்படியான வழிமுறைகளை இங்கே விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை முதன்மை அடையாள ஆவணமாக மாறியுள்ளது. அரசாங்க சேவைகள், வங்கி வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள் என பலவற்றை அணுகுவதற்கு இந்த 12 இலக்க தனித்துவமான ஐடி (Unique ID) முக்கியமானது. இந்த ஆவணம் பல நிர்வாகச் செயல்முறைகளை எளிதாக்கும் அதே வேளையில், கவனமாகக் கையாளப்படாவிட்டால், தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய அபாயமும் உள்ளது.

Advertisement

அதனுடன் இணைக்கப்பட்ட தகவல்களை வைத்து, மோசடி ஆசாமிகள் நிதி மோசடி, அடையாள திருட்டு அல்லது சேவைகளுக்கான அங்கீகாரமற்ற அணுகல் ஆகியவற்றிற்காக திருடப்பட்ட ஆதார் விவரங்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் பல சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அரங்கேறி வருகின்றன.

இதுபோன்ற தவல்கள் சுரண்டப்பட்டால்,பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவைகள் தடுப்பு, நிதி இழப்பு அல்லது அவர்களின் பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

ஆனால் உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை சரிபார்ப்பது எப்படி?:

Advertisement

உங்களால் நேரடியாகச் சரிபார்க்க முடியாவிட்டாலும், பயணங்கள், தங்குதல், வங்கிச் சேவை மற்றும் பிற நோக்கங்களுக்காக உங்கள் ஆதார் எண் கடந்த காலத்தில் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதை உங்களால் மதிப்பாய்வு செய்ய முடியும். மக்கள் தங்கள் ஆதாரை பாதுகாப்பாக வைத்திருக்கவும், அதன் பயன்பாட்டைக் கண்காணிக்கவும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பயனர்கள் தங்கள் ஆதார் பயன்பாட்டைக் கண்காணிக்கவும், பாதுகாக்கவும் உதவும் வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:
WhatsApp-ல் உங்கள் Chat-ஐ பாதுகாக்க உதவும் ‘சீக்ரெட் கோட்’… புதிய அப்டேட்டால் பயனர்கள் மகிழ்ச்சி..!

உங்கள் ஆதார் எண்ணின் பயன்பாட்டைக் கண்காணிக்க உதவும் படிப்படியான வழிகாட்டி:

Advertisement

1. myAadhaar போர்ட்டலுக்குச் செல்லவும்.

2. உங்கள் ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, “OTP மூலம் உள்நுழை” என்பதைக் கிளிக் செய்யவும்.

3. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். உங்கள் கணக்கை அணுக அதை உள்ளிடவும்.

Advertisement

4. “அங்கீகரிப்பு வரலாறு (Authentication History)” விருப்பத்தைத் தேர்வு செய்து, நீங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் காலத்திற்கான தேதி வரம்பைத் தேர்வு செய்யவும்.

5. பதிவைச் சரிபார்த்து, ஏதேனும் அறிமுகமில்லாத அல்லது சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் உள்ளதா என்பதை சரி பார்க்கவும். ஒருவேளை அங்கீகரிக்கப்படாத செயல்பாட்டை நீங்கள் கண்டறிந்தால், உடனடியாக UIDAI-க்கு புகாரளிக்கவும்.

இதையும் படிக்க:
Google Chrome பயனர்களே உஷார்.. அரசு கொடுத்த முக்கிய எச்சரிக்கை.. என்ன தெரியுமா?

Advertisement

* அல்லது, UIDAI-இன் கட்டணமில்லா உதவி எண்ணான 1947-ஐ அழைக்கவும்.

* அல்லது உங்கள் அறிக்கையை help@uidai.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

ஆதார் பயோமெட்ரிக்ஸை பாதுகாப்பது எப்படி?: இதற்கிடையில், UIDAI ஆனது தவறான பயன்பாட்டைத் தடுக்க, ஆதார் பயோமெட்ரிக்ஸைப் பூட்டும் மற்றும் திறக்கும் விருப்பத்தையும் வழங்குகிறது. உங்கள் ஆதார் பயோமெட்ரிக்ஸைப் பூட்டுவது உங்கள் ஆதார் விவரங்களை யாராவது அணுகினாலும், அவர்களால் பயோமெட்ரிக் தகவலை தவறாகப் பயன்படுத்த முடியாது என்பதை உறுதி செய்கிறது.

Advertisement

உங்கள் ஆதார் பயோமெட்ரிக்ஸைப் பூட்ட செய்ய வேண்டியவை:

* UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.

* “லாக்/அன்லாக் ஆதார்” என்கிற பகுதிக்குச் செல்லவும்

Advertisement

* வழிகாட்டுதல்களைப் படித்து, அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை மதிப்பாய்வு செய்யவும்.

* உங்கள் விர்ச்சுவல் ஐடி (VID), பெயர், பின் கோடு மற்றும் கேப்ட்சா கோடு உள்ளிட்ட தேவையான தகவலை வழங்கவும்.

இதையும் படிக்க:
2025ல் செல்போன்களின் விலை அதிகரிக்குமா..? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

Advertisement

* உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு முறை கடவுச்சொல்லைப் பெற, “OTP அனுப்பு” என்பதைக் கிளிக் செய்யவும்.

* பின்னர், இந்த செயல்முறையை முடிக்க மற்றும் உங்கள் ஆதார் பயோமெட்ரிக்ஸைப் லாக் செய்ய OTP ஐப் பயன்படுத்தி உங்கள் பயோமெட்ரிக்ஸைப் பாதுகாக்கவும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன