Connect with us

உலகம்

ஏலியன்களால் கடத்தல்… 3000 ஆண்டுகளுக்கு முன்பே ‘X’ தள கணக்கு தொடங்கிய மஸ்க்!

Published

on

Loading

ஏலியன்களால் கடத்தல்… 3000 ஆண்டுகளுக்கு முன்பே ‘X’ தள கணக்கு தொடங்கிய மஸ்க்!

ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான ஒரு விஷயமாகவே வைத்திருக்கிறார். அவர் அப்படி பயனர்களுக்கு பதில் அளிக்கும்போது ஏதாவது விஷயம் வேடிக்கையாக இருந்தது என்றால் உடனடியாக அவருடைய பதிவு ட்ரெண்டிங்கில் வந்துவிடும்.

அப்படி தான் தற்போது அவர் போட்ட பதிவின் மூலம்  ஏலான் மஸ்க் தலைப்பு செய்தியிலும் இடம்பிடித்திருக்கிறார்.  மஸ்க் இன்று அதிகாலை 2:30 மணியளவில் ஒரு மீம் ஒன்றைப் பகிர்ந்தபோது சமூக வலைத்தளங்களில் சிரிப்பலை எழுந்தது.  ” இன்று அதிகாலை 2:30 மணியளவில் எனது பக்கத்து வீட்டுக்காரர் என் கதவைத் தட்டிக் கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக, நான் முழித்துக்கொண்டு பேக்பைப்ஸ் விளையாடிக் கொண்டிருந்தேன். நீங்கள் அதை நம்புவீர்களா?” என பதிவிட்டு இருந்தார்.

Advertisement

அந்த பதிவை பார்த்த பயனர் ஒருவர் நீங்கள் ஒரு காட்டேரி என்பதால் நீங்கள் தூங்கவில்லையா? என கேள்வி எழுப்பி இருந்தார். மஸ்க் அதை நகைச்சுவையான முறையில் எடுத்துக்கொண்டு “நான் 3000 ஆண்டுகள் பழமையான ஒரு வேம்பைர் ” என நகைச்சுவையாக கூறினார்.

இதனையடுத்து, எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்குகான verified tick 3000BCE -இல் வாங்கியது போல மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை பார்த்த பலரும் நேற்று மஸ்க் தான் டைம் ட்ராவல் செய்யும்  வேம்பைர் என கூறியிருக்கிறார்.

இப்போது என்னவென்றால், அவரது X கணக்கு 3000BCE -இல் தொடங்கப்பட்டதை போல மாற்றி அமைக்கப்பட்டது ஒரு வேலை உண்மையில் ஏலியன்களால் அவர் கடத்தப்பட்டுவிட்டாரோ எனவும் அல்லது உண்மையில் அவர் வேம்பைரா என கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன