டி.வி
குறுகிய காலத்தில் நிறைவடைந்த மீனா தொடர்!

குறுகிய காலத்தில் நிறைவடைந்த மீனா தொடர்!
மீனா தொடர் 368 எபிசோடுகளுடன் இன்று(அக். 11) நிறைவடைந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை முற்பகல் 11 மணி ஒளிபரப்பாகி வந்த மீனா தொடர் குறுகிய காலத்தில் நிறைவடைந்துள்ளது.
பிரிந்துபோன இரு குடும்பங்களை இணைப்பதற்காக மீனா மேற்கொள்ளும் முயற்சிகளே இத்தொடரின் கதை.
மீனா தொடரின் பிரதானப் பாத்திரத்தில் ஆனந்த ராகம் தொடர் பிரபலம் இந்து செளத்ரி நடித்து வந்தார். மேலும், இத்தொடரில் ஜெய் ஸ்ரீனிவாச குமார், அபிஷேக் சங்கர், விக்னேஷ், சோனியா போஸ் உள்ளிட்டோர் நடிந்து இருந்தனர்.