வணிகம்
மலைப்பூண்டுக்கு இது தான் தாயகமாம்… அதனால தான் இங்கே விளையுற பூண்டுக்குத் தனி ருசி…

மலைப்பூண்டுக்கு இது தான் தாயகமாம்… அதனால தான் இங்கே விளையுற பூண்டுக்குத் தனி ருசி…
மலை மாவட்டத்தில் உருவானது தான் மலைப்பூண்டு ஆனால் எந்த மலையில் உருவானது என பலருக்கும் தெரியாது. வாங்க இப்போ தெரிஞ்சிக்கலாம். அது விவசாயத்திற்குப் பெயர் போன நீலகிரி மலை தான்.
நீலகிரி மாவட்டம் விவசாயத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாவட்டமாக விளங்குகிறது. இங்கு மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிஃப்ளவர் மற்றும் பலவகை காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நீலகிரி மாவட்டத்தில் வெள்ளைப் பூண்டு விளைவிக்கப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் அதிக அளவில் விளைவிக்கப்பட்ட வெள்ளைப் பூண்டு தற்பொழுது இதர காய்கறி வகைகளால் உற்பத்தி சற்று குறைந்து விளைச்சல் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: Kazhugumalai Vettuvan Kovil: தலைகீழாகக் கட்டப்பட்ட அதிசயம்… தென்னிந்தியாவின் எல்லோராவின் சிறப்பு பற்றித் தெரியுமா…
மலைப்பூண்டு முதன் முதலில் நீலகிரியில் தான் உருவானது எனத் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் இங்குள்ள மலை பூண்டை மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விளைவித்து சாகுபடி செய்கின்றனர். என்னதான் பிற மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் விளைவிக்கப்பட்டாலும் ஊட்டி மலைப் பூண்டின் ஒரிஜினல் தன்மை ஊட்டி மலையில் விளையும் பூண்டிற்கு மட்டுமே உள்ளது.
இயற்கை சூழ்நிலைக்கும் மண்ணின் தன்மைக்கும் ஏற்றார் போல அதிகமான காரத் தன்மையுடன் ஊட்டி மலைப்பூண்டு சிறப்பாக விற்பனை ஆகிறது. பல்வேறு வெளிச்சந்தைகளிலும் தற்பொழுது பூண்டின் விலை ஒரு கிலோ 400 ரூபாய் வரையிலும் விற்பனை செய்து வருவதால் அதிக அளவில் டிமான்டில் இருப்பது ஊட்டி மலை பூண்டு தான்.
மலை பூண்டு விளைவிப்பதற்கு அதிக முதலீடு மற்றும் வேலை ஆட்கள் தேவைப்படுவதால் மலை பூண்டு உற்பத்தியில் விவசாயிகள் அதிகமாக ஆர்வம் காட்டுவதில்லை. சமீபத்தில் நல்ல விலைக்கு விற்பனையாவதால் அதிக அளவில் மலைப் பூண்டு பயிர் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Question Bank: 10th, +2 ரிசல்ட்டில் சாதிக்கத் தயாராகும் மாணவர்கள்… ஸ்பெஷல் வினாத்தாள் புத்தகம் விநியோகம்…
மலைப்பூண்டு வியாபாரம் குறித்து பூண்டு வியாபாரி ராமன் கூறுகையில், “நான் இங்கு எனது பாட்டி காலம் முதல் பூண்டு வியாபாரம் செய்து வருகிறோம். பிற பகுதிகளிலிருந்து வாங்கும் பூண்டை விட மலைப்பூண்டு சிறப்பானதாக உள்ளது. இமாச்சலப் பிரதேசங்களிலிருந்து வரும் வெள்ளைப்பூண்டு 4 கிலோ பயன்படுத்தும் இடத்தில் ஊட்டி மலை போன்று இரண்டு கிலோ பயன்படுத்தினாலே போதுமானது.
அதிகமான கார தன்மையுடன் உள்ளதால் அதிகமான விலைக்கும் விற்கப்படுகிறது. ஆனால் சிறந்த தரத்துடனும் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது ஊட்டி மலைப் பூண்டு தான். ஊட்டி மலை பூண்டுகளின் பற்கள் பெரியதாக இருக்கும் எனவும் பிற மாநிலங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் வரும் பூண்டுகள் சிறிய அளவில் இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.
ஊட்டி மார்க்கெட்டிற்கு வரும் மலைப் பூண்டுகள் மேட்டுப்பாளையம் தினசரி சந்தைக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் இதர சந்தைகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க