Connect with us

உலகம்

“ரஷ்யாவை தாக்க ஏவுகணை வழங்கும் நாடுகளையும் தாக்குவோம்”!

Published

on

Loading

“ரஷ்யாவை தாக்க ஏவுகணை வழங்கும் நாடுகளையும் தாக்குவோம்”!

 அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது விதமான ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ரஷ்யா இராணுவ வீரர்கள், வட கொரியா சில வீரர்களும் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Advertisement

ஏவுகணையின் பெயர் புயல் நிழல் ஏவுகணை (Storm Shadow Missile) உலகிலேயே புயல் நிழல் ஏவுகணை பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்பதும் தெரியவந்திருக்கிறது. அதைப்போல, உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

தொடர்ச்சியாக போர் அங்கு நடந்து வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவுக்கு எதிராக NATO (32 நாடுகள் ஒன்றியம்) நாடுகள் போருக்குத் தயாராகிக் கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரஷ்யாவைத் தாக்க ஏவுகணை வழங்கும் நாடுகளை ரஷ்யா தாக்கும் என அதிபர் புதின் பேசியுள்ளார்.

ஏற்கனவே, ரஷ்யாவுக்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியதால், ரஷ்யாவும் உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அனுமதி கொடுத்து அதற்கான ஒப்பந்தத்துக் கையெழுத்துப் போட்டிருந்தார்.

Advertisement

எனவே, போர் பெரிய போராக வெடிக்க இது ஒரு முக்கியமான காரணமாகவும் பார்க்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது, ரஷ்யாவைத் தாக்க ஏவுகணை வழங்கும் நாடுகளை ரஷ்யா தாக்கும் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதிபர் புதின் பேசியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர் ” உக்ரைன் போர் விரிவடையும் பட்சத்தில் கட்டாயமாக நாங்கள் பதிலடி கொடுப்போம். ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடுகளின் இராணுவ வசதிகளைக் குறிவைக்க ரஷ்யாவிற்கு உரிமை உண்டு.

எனவே, ரஷ்யா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை வழங்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும். ரஷ்யா மீது தாக்குதல் நடத்தத் தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவி செய்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான போரை உலகப் போராக மேற்கத்திய நாடுகள் மாற்ற முயற்சி செய்து வருகிறது” எனவும் அமெரிக்காவை மறைமுகமாக குற்றம்சாட்டி அதிபர் புடின் பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன