Connect with us

வணிகம்

Elon Musk | உலகின் பெரும் பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்: எகிறிய சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?

Published

on

Loading

Elon Musk | உலகின் பெரும் பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்: எகிறிய சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?

எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 29 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்ததைத் தொடர்ந்து, உலகிலேயே இதுவரை இல்லாத சொத்து மதிப்பைக் கொண்ட பெரும் பணக்காரர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்புக்கு எலான் மஸ்க் ஆதரவு அளித்ததுடன், தேர்தலில் போட்டியிட நிதியுதவியும் அளித்தார். இந்நிலையில், அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு எலான் மஸ்கின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அமெரிக்க தேர்தல் முடிவு நாளில் மட்டும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரித்தது.

Advertisement

இதற்கு டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட எழுச்சியே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, ஒட்டுமொத்தமாக 40 சதவீதம் சொத்து மதிப்பு உயர்ந்த நிலையில், எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 29 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதன்மூலம், உலகிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு சொத்து மதிப்பைப் பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

எலான் மஸ்கின் நண்பரும், ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவருமான லேரி எலிசன் 19 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன