கிசு கிசு
ஆஸ்கர் நூலகத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் “ராயன்” திரைக்கதை.

ஆஸ்கர் நூலகத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் “ராயன்” திரைக்கதை.
தனுஷின் 50 வது படமான “ராயன்” பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சங்களுடன் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது.நடிகர் மற்றும் இயக்குனர் பரிமானங்களில் ஒரே படத்தில் தோன்றிய தனுஷின் நடிப்பிற்கு பெரு வரவேற்பு கிடைத்த போதிலும் விமர்சகர்களிடம் இருந்து இயக்குனர் தனுஷிற்கான பாராட்டு ஏதும் கிடைத்ததாய் இல்லை.ஆஸ்கர் விருதினை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற குழு மாணவர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா சார்ந்த பலரின் ஆய்வுக்காக திரைப்படங்களில் திரைக்கதைகளை தனது மார்கரெட் ஹெரிக் நூலகத்தில் முக்கிய சேகரிப்பில் சேர்த்துவைக்கும். இந்நிலையில் “ராயன்” படத்தின் திரைக்கதை ஆஸ்கர் நூலகத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் செய்திகள் வெளியாகி இயக்குனர் தனுஷின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது.மேலும் ஏற்கனவே தமிழில் வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் திரைக்கதை இவ் நூலகத்திற்கு தெரிவு செய்யபட்டமை குறிப்பிடத்தக்கது.