விநோதம்
இரத்தப் புற்றுநோய்களின் அறிகுறிகள் எப்படி இருக்கும்..? ஆரம்ப நிலையில் கண்டறியும் வழிகள்.!

இரத்தப் புற்றுநோய்களின் அறிகுறிகள் எப்படி இருக்கும்..? ஆரம்ப நிலையில் கண்டறியும் வழிகள்.!
உடலானது இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் தேவையில்லாத இரத்த அணுக்கள் அதிகரித்து தேவையான இரத்த அணுக்கள் குறையும் நிலையே இரத்த புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. அணுக்கள் என்பது மூன்று விதமாக உள்ளது. வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள், தட்டை அணுக்கள். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பணிகள் உண்டு. இதன் பணிகள் பாதிக்கும் வகையில் அசாதாரணமான வளர்ச்சி இருக்கும் போது இரத்த புற்றுநோய் ஏற்படுகிறது.
இரத்த புற்றுநோயை மருத்துவ மொழியில் லுகேமியா என்று அழைக்கப்படுகிறது. ரத்தப் புற்றுநோயில் ஒன்றல்ல பல வகைகள் உள்ளன. எனினும் பெரும்பாலான வகையான இரத்த புற்றுநோய்கள் எலும்பு மஜ்ஜையில் தொடங்குகின்றன. குருகிராமில் உள்ள மணிப்பால் மருத்துவமனையின் டாக்டர் மோஹித் சக்சேனா, புறக்கணிக்கக்கூடாத இரத்த புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளை பற்றி விளக்கியுள்ளார்.
இரத்த புற்றுநோய் அறிகுறிகள்:
1. ஈறுகள், மூக்கு அல்லது சிறுநீர் அல்லது மலம் ஆகியவற்றில் இருந்து அசாதரண இரத்தப்போக்கு.
2. சிராய்ப்பு.
3. தோலில் தடிப்புகள், சிறிய சிவப்பு புள்ளிகள் (பெட்டீசியா) அல்லது பெரிய ஊதா நிற புள்ளிகள் (பர்புரா) அதிகமாக தோன்றும்.
4. திடீர் எடை குறைப்பு.
5. கழுத்து, அக்குள், இடுப்பு அல்லது உடலின் மற்றொரு பகுதியில் கட்டிகள் அல்லது வீக்கம்.
6. சோர்வு மற்றும் பலவீனம்.
7. மூச்சுத்திணறல்.
8. இரவில் அதிக வியர்வை.
9. தொடர்ச்சியான அல்லது கடுமையான நோய்த்தொற்றுகள்.
10. தொடர் காய்ச்சல் (100.4°F அல்லது அதற்கு மேல்)
11. தோலில் ஏற்படும் சொறி
12. எலும்புகள், மூட்டுகள் அல்லது வயிற்றில் வலி (வயிற்றுப் பகுதி)
13. தோல் வெளிர்நிறம் ஏற்படுதல்
இரத்த புற்றுநோய் அறிகுறிகளுக்கான காரணங்கள்
இரத்தப்போக்கு, எளிதில் சிராய்ப்பு, பெட்டீசியா மற்றும் பர்புரா ஆகியவை ப்ளேட்லெட்டில் ஏற்படும் குறைப்பாடு மற்றும் இரத்த உறைதலில் உள்ள பிரச்சனைகளை குறிக்கும் அறிகுறிகளாகும்.
இரத்த சோகை அல்லது ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் சோர்வு, உடல் உழைப்பின் போது மூச்சுத்திணறல் மற்றும் தோலில் வெளிர்நிறம் ஆகியவை ஏற்படும்.
காய்ச்சல் மற்றும் நோய்த்தொற்றுகள் ஆனது குறைந்த அளவிலான வெள்ளை இரத்த அணுக்களால் ஏற்படுகின்றன.
Also Read |
உச்சி முதல் பாதம் வரை பலன் தரும் ஏபிசி ஜூஸ்… தினமும் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டிய பானம்
நிணநீர் சுரப்பிகளில் அசாதாரண வெள்ளை இரத்த அணுக்கள் உருவாகும் போது கட்டிகள் மற்றும் வீக்கம் ஏற்படுகிறது
மண்ணீரலில் அசாதாரண இரத்த அணுக்கள் உருவாகும் போது சில நேரங்களில் வயிற்றில் அசெளகரியம் அல்லது கூர்மையான வலியை ஏற்படுத்தும். ஃபரிதாபாத்தில் உள்ள சர்வோதயா மருத்துவமனையின் மருத்துவர் தினேஷ் பெந்தர்கர், நாள்பட்ட லிம்போசைடிக் லுகேமியா என்ற மற்றொரு வகை இரத்த புற்றுநோயை பற்றி விளக்கி கூறியுள்ளார்.
நாள்பட்ட லிம்போசைடிக் லுகேமியா என்பது ஒரு வகை இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை புற்றுநோயாகும். இந்த லுகேமியா மற்ற வகை லுகேமியாவுடன் ஒப்பிடும்போது மிக மெதுவாக வளரும். நாள்பட்ட லிம்போசைடிக் லுகேமியா பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் அசாதாரண லிம்போசைட்டுகள் உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன, அவை சரியாக செயல்படாது.
இதனால், எலும்பு மஜ்ஜையின் செயல்பாடும் பாதிக்கப்படுகிறது. வலியற்ற விரிவாக்கப்பட்ட நிணநீர் முனைகள், சோர்வு, காய்ச்சல், விரிவாக்கப்பட்ட மண்ணீரல் காரணமாக அடிவயிற்றின் மேல் இடது பக்கத்தில் வலி, இரவு வியர்வை, எடை இழப்பு, அடிக்கடி தொற்று ஆகியவை நாள்பட்ட லிம்போசைடிக் லுகேமியாவின் அறிகுறிகளாகும்.