Connect with us

சினிமா

இவள் எல்லாம் மேனேஜரா!! அடுத்த வேளை சாப்பாட்டுக்கு தான் அந்த வாய்ப்பு எடுத்தேன்!! வாணி போஜன்

Published

on

Loading

இவள் எல்லாம் மேனேஜரா!! அடுத்த வேளை சாப்பாட்டுக்கு தான் அந்த வாய்ப்பு எடுத்தேன்!! வாணி போஜன்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வருபவர்களில் நடிகை வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2020 -ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.தற்போது வாணி போஜன் சில முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். செங்கமலம், சட்னி சாம்பார் உள்ளிட்ட ஓடிடி தள படங்களில் வாணி போஜன் நடிப்பில் வெளியாகியது. தற்போது ஆர்யன், கேசினோ, பகைவருக்கு அருவாய் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கடந்த 2008ல் தனியார் ஏர்லைனில் சூப்பர் வைசராக பணியாற்றிய போது எனக்கு டிகிரி கிடையாது. ஆனால், நான் நன்றாக பேசுவேன், மக்களுக்கும் அது பிடிக்கும். அதனால் பணிக்குச்சேர்ந்த 2 வருடத்திலேயே எனக்கு பிரமோஷன் கொடுத்துவிட்டார்கள். அந்நேரத்தில் தான் நான் பணத்தை பார்த்தேன்.சம்பாதிக்க ஆரம்பித்து எல்லாம் கிடைத்தது. அப்போது இன்னொரு ஏர்லைனில் இருந்து மேனேஜர் போஸ்ட்டுக்காக அழைப்பு வந்து உறுதியும் செய்தனர். அங்கிருந்த ஒரு நபர் அவளுக்கு டிகிரியே இல்லை என்று கூறி எனக்கு மேனேஜர் வேலையை கொடுக்கக்கூடாது என்று கூறிவிட்டார்.அதன்பின் எனக்கு போன் செய்து, நீங்கள் குழுவில் பணியாற்றலாம் ஆனால் மேனேஜர் இல்லை என்று சொன்னார்கள். இருக்குறதுக்கு விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்ட கதைமாதிரி கடைசியில் ஒன்னும் இல்லாமல் வீட்டிற்கு செல்லவேண்டிய சூழல் உருவானது.ஒரு வருஷம் எதுவும் செய்யாமல் வீட்டில் சும்மா இருந்தேன். பின் தனியார் ஜவுளிக்கடையில் நான் போஸ் கொடுத்த போஸ்டரை பார்த்த என் உறவினர்கள் என் அம்மாவிடம் என்ன வாணி நடிக்கிறாளாமே, அது வாணிதானே என்றெல்லாம் பேசினார்கள். அதைக்கேட்ட அவர்கள் பயந்துவிட்டார்கள்.திரைத்துறை என்றாலே மோசமாக இருக்கும் என்ற எண்ணம் தான் காரணம். பின் விஜய் டிவி வாய்ப்பு கிடைத்ததும் எடுக்கொண்டே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. காரணம் அடுத்த வேளைக்கு நான் சாப்பிடவேண்டும், என்னைப்பற்றி பேசுகிறவர்கள் யாரும் எங்கள் குடும்பத்துக்கு சாப்பாடு போடமாட்டார்கள், அப்படி ஆரம்பித்தது தான் என் சின்னத்திரைப் பயணமென்று வாணி போஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன