கிசு கிசு
என்னது சிம்பு-திரிஷா திருமணமா ? இரண்டும் அமைஞ்சதுன்னா உடனடியாக திருமணம்… குழப்பத்தில் ரசிகர்கள்…

என்னது சிம்பு-திரிஷா திருமணமா ? இரண்டும் அமைஞ்சதுன்னா உடனடியாக திருமணம்… குழப்பத்தில் ரசிகர்கள்…
40வயதை நெருங்கிய திரிஷா இன்னும் ஏன் திருமணம் செய்யவில்லை என்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் ஒரு கருத்தைத் தெரிவித்து இருந்தார். அதில் திரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்றும் அவர்கள் அப்போது மோதிரங்களை மாற்றிக் கொண்டதாகவும் கூறினார்.ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றார். அது மட்டுமல்லாமல் தெலுங்கு நடிகர் ராணாவுடனும் திரிஷாவுக்குக் காதல் என்றார். அடுத்ததாக சிம்புவின் காதல் வலையில் திரிஷா சிக்கி மீண்டு வந்ததாக கூறினார். அந்த வகையில் திரிஷாவுக்குப் பார்த்த மாப்பிள்ளைகள் யாரையும் பிடிக்காதது தான் காரணம் என்றார்.எஸ்டிஆர், திரிஷா இன்னும் திருமணம் செய்யாம இருக்காங்களே ஏன் என வாசகர் ஒருவர் குறும்புத்தனமாக ஒரு கேள்வி கேட்டுள்ளார். சிம்புவுக்கு சரியான மணமகள் அமையல. திரிஷாவுக்கு சரியான மணமகன் அமையல. இரண்டும் அமைஞ்சதுன்னா உடனடியாக திருமணம் செய்து கொள்ள அவர்கள் இருவருமே தயாராக இருக்காங்க என்று பதில் அளித்தார். ஒருவேளை இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டால் எப்படி இருக்கும் என் வதந்திகளுக்கு ரியாக்சன் செய்து வருகின்றனர்.