Connect with us

சினிமா

ஒரே நாளில் சாதனை படைத்த ‘கிஸ்ஸிக்’ வீடியோ.. நினைத்து பார்க்க முடியாத வெற்றி

Published

on

Loading

ஒரே நாளில் சாதனை படைத்த ‘கிஸ்ஸிக்’ வீடியோ.. நினைத்து பார்க்க முடியாத வெற்றி

2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாகவும் ஆயிரம் கோடி வசூலித்திருந்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவானது.புஷ்பா 2 படம் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் இருந்து ராஷ்மிகா மந்தாராவின் கேரக்டர் பர்ஸ்ட், லுக் என்பன வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இதை தொடர்ந்து படத்தின் டீசர் படத்தின் பாடல்களின் லிரிக்ஸ் வீடியோவும் வெளியாகி வைரல் ஆனது. புஷ்பா முதலாவது பாகத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருப்பார். அந்த பாடல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது.அதேபோல புஷ்பா 2 படத்திலும் குத்தாட்ட பாடல் ஒன்றுக்கு நடிகர் ஸ்ரீ லீலா நடனமாடியுள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி  ஒரு சில நாட்களுக்கு முன்புதான் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் அல்லு அர்ஜுன் தமிழில் பேசி அசத்தியிருந்தார்.இந்த நிலையில், அல்லு அர்ஜுன் – ஸ்ரீ லீலா நடனத்தில் வெளியான ‘கிஸ்ஸிக்’ என்ற பாடல் இணையத்தில் படு வைரலாகியுள்ளதோடு ஒரு நாளில் 42 மில்லியங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு புஷ்பா 2 படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன