திரை விமர்சனம்
சிவா மீது இவ்வளவு வன்மம் ஏன்! லக்கி பாஸ்கர் திரைப்படத்தை பாராட்டிய தனுஷ்! அப்போ அமரன்…

சிவா மீது இவ்வளவு வன்மம் ஏன்! லக்கி பாஸ்கர் திரைப்படத்தை பாராட்டிய தனுஷ்! அப்போ அமரன்…
தீபாவளியை முன்னிட்டு, அமரன், பிரதர், லக்கி பாஸ்கர், ப்ளடி பெக்கர் என 4 படங்கள் வெளியானது. இதில், அமரன் படம் தமிழகத்தில் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. அதே போல லக்கி பாஸ்கர் திரைப்படமும் நல்ல வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் நடிகர் தனுஷ், துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படத்தினை வாழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்தார். தற்போது அவர் இயக்கத்தில்தான் லக்கி பாஸ்கர் படம் வெளியாகியிருக்கிறது. வாத்தி படம் தமிழ் ரசிகர்களிடமும் தெலுங்கு ரசிகர்களுடமும் நல்ல வரவேற்பை பெற்றது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் இவர் ஏற்கனவே நடித்திருப்பதால், அவர் இயக்கத்தில் தற்போது வெளியான லக்கி பாஸ்கர் படத்தை இவர் பாராட்டியிருப்பதாக கூறப்படுகிறது. லக்கி பாஸ்கர் படத்தில், துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கிறார்.d_i_aஇந்நிலையில் sk ரசிகர்கள் குழம்பி இருக்கிறார்கள். தனது நண்பன் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை அவர் பாராட்டவில்லை என்று யோசிக்கிறார்கள். தனுஷ் அமரன் திரைப்படம் இன்னும் பார்க்காமல் இருப்பதால் அவர் அதை பாராட்டாமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.