இலங்கை
ரணிலுக்கு ஆதரவு கோரி சிலிண்டருடன் செல்ல முற்பட்ட ஆறுவர் கைது!

ரணிலுக்கு ஆதரவு கோரி சிலிண்டருடன் செல்ல முற்பட்ட ஆறுவர் கைது!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் எரிவாயு சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்லதற்கு தயாராக இருந்த 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை கட்டி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பேரணியாக செல்லத் தயாராக இருந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த நபர்களிடம் இருந்த துண்டுபிரசுரங்கள், சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிளை என்பனவற்றை பொலிஸார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (ச)