சினிமா
“இது என் சுயசரிதை அல்ல”முஃபாஸா கதாபாத்திரத்திற்கு குரல்கொடுத்துள்ள சூப்பர்ஸ்டார் பேச்சு..!

“இது என் சுயசரிதை அல்ல”முஃபாஸா கதாபாத்திரத்திற்கு குரல்கொடுத்துள்ள சூப்பர்ஸ்டார் பேச்சு..!
பாலிவுட் சூப்பர்ஸ்டார் சாருக்கான், அவரது திறமையான குரலினால் மீண்டும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். “முஃபாஸா தி லயன் கிங்” என்ற எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின் இந்தி பதிப்பில் முக்கிய கதாபாத்திரமான முஃபாஸாவிற்கு குரல் கொடுத்துள்ளார்.சமீபத்தில், படம் குறித்து கருத்து தெரிவித்த சாருக்கான், “முஃபாஸா”வின் கதை மற்றும் அதன் ஆழமான உள்ளடக்கத்தை பற்றி பகிர்ந்தார். அவர் கூறியது “முஃபாஸா தி லயன் கிங்’ திரைப்படம் பெரும் சாம்ராஜ்ஜியம் இல்லாமல் தனிமையை மட்டுமே துணை கொண்ட ஒருவனின் ஆசையைப் பற்றியது. இது என் சுயசரிதை அல்ல; இது முஃபாஸாவை பற்றிய கதை.”சாருக்கானின் குரலால், முஃபாஸா கதாபாத்திரத்திற்கு ஒரு புதிய உயிரோட்டம் கிடைத்திருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும், அவரின் மகன் ஆரியன் கான் சிம்பாவிற்கு குரல் கொடுத்திருப்பது இந்தப் படத்திற்கான வேறு ஒரு சிறப்பாகும்.”முஃபாஸா தி லயன் கிங்”, தனது கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களின் மெருகூட்டலால் உலகளாவிய தரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை, தந்தை-மகன் கூட்டணியில் குரலூட்டல் இந்த திரைப்படத்தின் பெரும் விசேஷமாக உருவாகியுள்ளது.