உலகம்
இஸ்ரேல் – ஹிஸ்புல்லாஹ் போர்நிறுத்தம்!

இஸ்ரேல் – ஹிஸ்புல்லாஹ் போர்நிறுத்தம்!
இஸ்ரேல் – ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்கிடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்ததத்திற்கமைய இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான லெபனான் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.
போர்நிறுத்தத்தின் முதல் நாளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் சொந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லையென இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் அவிசே அத்ராயி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தலையீட்டில் நேற்றைய தினம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டது. தெற்கு லெபனானிலுள்ள தமது தரப்பினரை அங்கிருந்து மீளப்பெறுவதற்கு இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாஹ்விற்கு 60 நாட்கள் கொண்ட காலவகாசம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.