விநோதம்
சளி இருமல் பிரச்சனையா ? டக்குனு சரியாகணுமா ? இந்த கசாயம் டிரை பண்ணுங்க..!!

சளி இருமல் பிரச்சனையா ? டக்குனு சரியாகணுமா ? இந்த கசாயம் டிரை பண்ணுங்க..!!
கசாயம் போடுவதற்கு முதல்ல நம்ம கவனிக்க வேண்டியது அதுக்கு போட வேண்டிய எல்லா பொருட்களுமே ஒற்றைப்படை எண்ணில் இருக்கணும். அதாவது ஆட் நம்பர்ஸ்ல தான் இருக்கணும். ஓமவள்ளி இலை, தூதுவளை, துளசி இந்த மூன்று பொருட்களுமே சளி இருமலை குணப்படுத்துவதற்கு உதவும். இந்த மூலிகை இலைகளோட மிளகு இஞ்சியும் எடுத்துக்கணும்.
மிளகு, இஞ்சி அப்படியே கசாயத்துல சேர்க்கறதை விடஇடிச்சு சேர்த்தால் இன்னும் எபக்ட்டிவ்வா இருக்கும். அதுக்காக இஞ்சியையும், மிளகையும் அம்மில நல்லா இடிச்சு அதுக்கு அப்புறமா சேர்த்துக்கலாம். கசாயம் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் ரெண்டு கிளாஸ் தண்ணி எடுத்துக்கோங்க. எத்தனை பேருக்கு செய்றீங்களோ அதிலிருந்து டபுள் மடங்கா தண்ணீர் எடுத்துக்கோங்க. அப்போ தான் வத்த வைக்கும் போது அளவு கரெக்டா வரும். அதுல இடிச்சு வச்சிருக்க இஞ்சியும், மிளகையும் சேர்த்துக்கோங்க.
தண்ணில நல்லா கழுவும் அதுக்கப்புறமா தூதுவளை, ஓமவள்ளி இலை, துளசியும் சேர்த்துக்கோங்க…அடுப்பை பத்த வச்சு இது எல்லாத்தையும் நல்லா கொதிக்க வச்சு வறுத்த வச்சுக்கோங்க…முதல்ல கொஞ்ச நேரம் ஹைஃப்ளேம்ல வச்சு இலைகளோட சாறு எல்லாம் தண்ணிக்குள்ள இறங்கிடும். அதுக்கு அப்புறமா கசாயத்தை வத்த வச்சுக்கோங்க..கசாயம் செய்றப்பவே அதோட ஸ்மெல் வீடு முழுக்க வர ஆரம்பிச்சிடும்.
இதையும் வாசிக்க : பெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய் : விடுபடுவது எப்படி ?
நல்லா கொதிச்சு வத்தி வந்ததுக்கு அப்புறமா காசாயத்தை அடுப்பில் ஆஃப் பண்ணிட்டு ஒரு வடிகட்டி வைத்து வடிகட்டி எடுத்துக்கோங்க..மூலிகை கசாயம் தயாராயிடுச்சு.. இதை அப்படியே குடிக்கலாம் இல்லனா தேன் சேர்த்துக் குடிக்கலாம். ஆனா சூடா இருக்கும்போது தேன் சேர்க்க கூடாது கஷாயம் கொஞ்சம் ஆறினதுக்கு அப்புறமா தேன் கலந்து குடிக்கலாம். சளி, இருமல் இருக்கிற பெரியவங்கல இருந்து சின்ன குழந்தைங்க வரைக்கும் இந்த கசாயத்தை குடிக்கலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க