Connect with us

சினிமா

சைலன்ட்டா சம்பவம் செய்த தனுஷ்!

Published

on

Loading

சைலன்ட்டா சம்பவம் செய்த தனுஷ்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில், நானும் ரவுடி தான் திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட ஒரு சில வீடியோக்களை நயன்தாரா அந்த ஆவணப் படத்தில் உபயோகப்படுத்தியிருந்தார்.

அதற்கு அந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், தன்னை கேட்டகமால் அந்த வீடியோக்களை பயன்படுத்தியல் நஷ்ட ஈடு கேட்டு ரூ.10 கோடி முன்னதாக நோட்டீஸ் ஒன்றும் அனுப்பியிருந்தார். ஆனால், அதனை பொருட்படுத்தாத நயன்தாரா அந்த வீடியோக்களை அவரது ஆவணப் படத்தில் உபயோகப்படுத்தியிருந்தார்.

Advertisement

மேலும், தனுஷின் நோட்டீஸுக்கும் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் இருந்தார். இதனை தொடர்ந்து, நயன்தாரா-விக்னேஷ் ஆவணப்படத்தை வெளியிட்டிருந்த நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் மீது தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் விளக்கம் அளிக்க நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக நானும் ரௌடிதான் காட்சிகளைப் பயன்படுத்த நயன்தாரா, தனுஷிடம் அனுமதி கேட்ட நிலையில் அதற்கு 2 ஆண்டுகளாக அனுமதிக்காமல் இழுத்தடித்தார் என சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தார் நயன்தாரா. இந்த சர்ச்சைகளால் கடைசி நேரத்தில் இந்த ஆவணப்படத்தின் மீது ஒரு செயற்கையான எதிர்பார்ப்பு உருவானது. ஆனாலும் அந்த ஆவணப்படம் பெரியளவில் ரசிகர்களிடம் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன