Connect with us

சினிமா

தனுஷுடன் ட்ராவலே பண்ண முடியாது..அவர் காமெடி பீஸ்!! பிரபல பாடகி காட்டம்..

Published

on

Loading

தனுஷுடன் ட்ராவலே பண்ண முடியாது..அவர் காமெடி பீஸ்!! பிரபல பாடகி காட்டம்..

தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் சென்று தன் திறமையை நிரூபித்து காட்டி தற்போது இயக்குநராக அடுத்தடுத்த படங்களை இயக்கி வருபவர் தான் நடிகர் தனுஷ். இதற்கிடையில் விவாகரத்து வழக்கு, நயன் தாராவுடான வழக்குகளை சந்தித்து வந்தார்.நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்துடனான சட்டப்பூர்வமான விவாகரத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 18 ஆண்டு திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்திருகிறது. இது ஒரு பக்கம் இருக்க விவாகரத்து வழக்கு முடிந்த நிலையில் நயன் தாரா மீது நேற்று தனுஷ் வழக்குபதிவு செய்துள்ளார்.இந்நிலையில், பாடகி சுசித்ரா அளித்த பேட்டியில், தனுஷை தாக்கி நயன் வெளியிட்ட அறிக்கைக்கு, தனுஷுடன் நடித்த நடிகைகளே ஆதரவு அளித்திருக்கிறார்கள். தனிப்பட்ட ரீதியில் அவர்களை தனுஷ் கோபமூட்டி இருக்கலாம். அவர் ஒரு சைக்கோ, பார்ப்பதற்கு நல்லவர் போலவே இருப்பார். அவர் ஒன்றும் சிவகார்த்திகேயனுக்கோ, அனிருத்துக்கோ வாய்ப்பு கொடுக்கவில்லை.நான், நயன் எல்லாம் தனுஷின் சங்காத்தமே வேண்டாம் என்று முடிவு செய்து வைத்து அவரிடம் இருந்து விலகி இருந்தோம். அவர் ஒரு ஏமாற்றக்கூடிய நண்பர். என் வாழ்க்கையில் சுச்சி லீக்ஸை செய்ததே தனுஷ்தான். அவருடன் எல்லாம் நீண்ட நாட்கள் ட்ராவல் பண்ண முடியாது. அந்தளவிற்கு அவர் மோசமானவர். என்னைப்பொறுத்தவரைக்கும் தனுஷ் என்பவர் ஒரு காமெடி பீஸ் தான் என்று சுசித்ரா அந்த பேட்டியில் தனுஷை கண்டபடி பேசியிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன