நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 28/11/2024 | Edited on 28/11/2024

பிரபல பாலிவுட் தம்பதிகளான அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இருந்து வருவதாக சமீப காலமாக அவ்வப்போது தகவல்கள் உலா வந்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம், அதன் பிறகு நடந்த ஒரு சினிமா விருது நிகழ்வு என அனைத்திலும் ஐஸ்வர்யா ராய் தனியாகவே கலந்து கொண்டதால் கணவர் அபிஷேக்குடன் கருத்து வேறுபாடு இருப்பதால் தான் அவர் தனியாக வந்ததாக பேச்சுகள் அடிப்பட்டது. 

இந்த சூழலில் அந்த தகவலுக்கு மேலும் வலு சேர்க்கும்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளதாக சமூக வலைதளங்களில் சொல்லப்படுகிறது. அதாவது துபாயில் நடந்த பெண்கள் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். அப்போது மேடையில், டிஜிட்டல் திரையில் ஐஸ்வர்யா ராயின் திரையுலக சாதனைகள் குறித்த வீடியோ திரையிடப்பட்டது. அதில் ஐஸ்வர்யா ராய் என அவரது பெயர் இடம் பெற்றிருந்தது. அவரது கணவர் பெயர் பச்சன் இணைக்கப்படாமல் திரையிடப்பட்டது. இது தற்போது பேசு பொருளாக பாலிவுட் வட்டாரங்களில் மாறியுள்ளது. விரைவில் இந்த தகவலுக்கு அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா தம்பதி விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement