Connect with us

பொழுதுபோக்கு

லைட்மேன் கொடுத்த அதிர்ச்சி: பிடித்த பழக்கத்தையே கைவிட்ட கமல்; இன்றுவரை தொடவே இல்லையாம்!

Published

on

Kh Manajh

Loading

லைட்மேன் கொடுத்த அதிர்ச்சி: பிடித்த பழக்கத்தையே கைவிட்ட கமல்; இன்றுவரை தொடவே இல்லையாம்!

தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்து முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் கமல்ஹாசன், ஒரு லைட்மேன் செய்த வேலையால் தான் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டதாக ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.சிறுவயதில் சாவித்ரியின் மகனாக களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் வாலிபனாக அவருக்கு, தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால், மலையாள சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அதன்பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.அரங்கேற்றம் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தை தொடர்ந்து அடுத்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த கமல்ஹாசன், தற்போதைய தமிழ் சினிமாவில், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர் என பல திறமையுடன் வலம் வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் பல புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்த பெருமை கமல்ஹாசனுக்கு உண்டு.இப்படி பல பெருமைகளையும் திறமைகளையும் வைத்திருக்கும் கமல்ஹாசன், தனது வாலிப வயதில் சிகரெட் பிடிக்க முயற்சித்துள்ளார். அப்படி ஒருமுறை ஒரு படத்தின் படப்பிடிப்பில் சிகரெட் பிடிக்க பார்த்தபோது, அவரை பார்த்துக்கொண்டிருந்த ஒரு லைட்மேன், திடீரென அவரிடம் வந்து சிகரெட்டை பிடுங்கிவிட்டு, இப்போதான் களத்தூர் கண்ணம்மா படத்தில் ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று பாடியது போல் உள்ளது அதற்குள் சிகரெட் பழக்கமா என்று கேட்டு திட்டியுள்ளார்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கமல்ஹாசன், படப்பிடிப்பு தளத்தில் சிகரெட் பிடிப்பதை நிறுத்த முயற்சித்தபோதும், சிகரெட் பிடிப்பதை யாரேனும் பார்த்துவிடுவார்களா என்ற பயத்திலேயே இருந்துள்ளார். கடைசியில் கழிவரையில் மட்டும் தான் நிம்மதியாக சிகரெட் பிடிக்க முடியும் என்று நினைத்த அவர், கழிவறை போய் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற இந்த பழக்கம் நமக்கு தேவையா என்று நினைத்து சிகரெட் பிடிப்பதையே விட்டுவிட்டாராம்.இயக்குனர் ரமேஷ் அரவிந்த், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருடன் கமல்ஹாசன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று அறியப்பட்ட கமல்ஹாசன் சமீபத்தில் தனது பிறந்த நாளில் உலக நாயகன் பட்டம் தனக்கு தேவையில்லை என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன