இந்தியா
அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணி!

அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணி!
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் சென்ற சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3 க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் சங்கீதா குமாரி 32 வது நிமிடத்திலும், சலீமா 37வது நிமிடத்திலும் பீல்டு கோல் அடித்தனர். 60வது நிமிடத்தில் தீபிகா, பெனால்டி கார்னரில் கோல் அடித்தார்.
இந்திய அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது.
இதன் மூலம் இந்திய அணி 8 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. (ப)