Connect with us

இந்தியா

எதிரிக்கு எதிரி நண்பன்.. சீமான், ரஜினி சந்திப்பின் பின்னணி

Published

on

Loading

எதிரிக்கு எதிரி நண்பன்.. சீமான், ரஜினி சந்திப்பின் பின்னணி

சமீபத்தில் மற்றும் இடையே ஆன சந்திப்பு சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது. ஒரு காலத்தில் ரஜினியை விமர்சித்த சீமான் இப்போது நேரடியாக அவரது வீட்டிற்கு சென்று பல மணி நேரம் உரையாடிவிட்டு வந்திருக்கிறார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் அரசியல் மற்றும் சினிமா குறித்து பேசியதாக கூறியிருந்தார். அதோடு அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியதாக சீமான் சொல்லி உள்ளார். இந்நிலையில் ரஜினி மற்றும் சீமான் சந்திப்பின் பின்னணி என்ன என்று பல விஷயங்கள் கூறப்படுகிறது.

Advertisement

வேட்டையன் படம் நன்றாக இருப்பதாக சீமான் பாராட்டிய நிலையில் அவருக்கு நன்றி தெரிவிக்க ரஜினி போன் செய்து நேரில் அழைத்துள்ளதாக கூறப்பட்டது. மற்றொருபுறம் சமீபத்தில் விஜய்யின் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய் சில விஷயங்கள் பேசிய நிலையில் அதற்கு கடும் கண்டனத்தை சீமான் தெரிவித்திருந்தார்.

விஜய்யை தாக்கும்படியான கருத்துக்களை பகிர்ந்து இருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் சீமான் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்த சூழலில் ஏற்கனவே விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே ஒரு போரே போய்க்கொண்டிருக்கிறது. இரு நடிகர்களின் படங்கள் வெளியானாலும் சமூக வலைதளங்களில் போட்டி போட்டுக் கொண்டு இருப்பார்கள்.

இப்போது எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல சீமான் மற்றும் ரஜினி இருவருக்கும் விஜய் எதிர் அணியாக இருக்கிறார். ஆகையால் ரஜினி ரசிகர்களின் வாக்குகளை பெரும் எண்ணத்தில் சீமான் இவ்வாறு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

ஏற்கனவே ரஜினி அரசியலில் இறங்குவதாக உறுதிப்படக் கூறிய நிலையில் சில காரணங்களினால் பின்வாங்கி விட்டார். இப்போது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போல் சீமான் ரஜினியை நம்பி அரசியலில் களம் காண இருக்கிறார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன