சினிமா
ஐஸ்வர்யா செய்த காரியம்..! ரொம்ப நன்றி அண்ணி..! தனுஷ் ரசிகர் நெகிழ்ச்சி..!

ஐஸ்வர்யா செய்த காரியம்..! ரொம்ப நன்றி அண்ணி..! தனுஷ் ரசிகர் நெகிழ்ச்சி..!
பிரபல சினிமா நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம் பல மாதங்களாக இழுப்பில் கிடந்து ஒருவழியாக விவாகரத்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது இந்நிலையில் நவம்பர் 27ம் தேதி அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம். தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிவை அறிவித்து இரண்டு ஆண்டுகள் கழித்து தான் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தார்கள். அவர்கள் விரும்பியபடியே விவாகரத்து கிடைத்துவிட்டது. தனுஷை பிரிவதாக கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தபோதிலும் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்வதை ஐஸ்வர்யா நிறுத்தவில்லை. மேலும் தானும், தனுஷும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நீக்கவில்லை. பிரபலங்கள் விவாகரத்தை அறிவித்த உடனே இன்ஸ்டாகிராமில் அதிரடி மாற்றம் செய்வார்கள். இந்நிலையில் விவாகரத்து கிடைத்து இரண்டு நாளாகிய நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இன்ஸ்டாவில் தனுஷை அன்ஃபாலோ செய்யவில்லை. மேலும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களும் அப்படியே இருக்கு.விவாகரத்து கிடைத்த கையோடு தனுஷ் அண்ணாவை அன்ஃபாலோ செய்து, அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை நீக்கிவிடுவீர்கள் என்று நினைத்தோம். எல்லாமே பழைபடி அப்படியே தான் இருக்கிறது. ரொம்ப சந்தோஷம் அண்ணி என தெரிவித்துள்ளனர் தனுஷ் ரசிகர்கள்.