உலகம்
பங்களாதேஷில் இஸ்கானை தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

பங்களாதேஷில் இஸ்கானை தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (ISKCON) நடவடிக்கைகளை தடை செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்க பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மறுத்துவிட்டது.
இஸ்கான் நிறுவனத்திற்கு தடை கோரிய மனு மீதான விசாரணையின் போது, அரசு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்நாட்டு சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் பங்களாதேஷில் இந்து மத தலைவரான இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் இந்து சமூகத்தின் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்கானைத் தடை செய்யக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்ட ஒரு நாளில் இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பங்களாதேஷின் சிட்டகாங் மற்றும் ரங்பூர் நகரங்களில் எந்தவிதமான அசம்பாவிதச் சூழலும் ஏற்படாமல் தவிர்க்க, அவசரகாலச் சட்டம் பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.
மனு மீதான விசாரணை நேற்று இடம்பெற்றுக்கொண்டிருந்த போது “இஸ்கானை தடை செய்ய வேண்டிய நேரம் இது” என்று மனுதாரர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையிலேயே, இஸ்கான் நடவடிக்கைகளை தடை செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்க பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.