Connect with us

இந்தியா

பிரபாஸ் உடன் என்னை தொடர்புபடுத்தி பேச காரணம் என் அண்ணன் தான்.. ஆட்டம் காணும் ஆந்திர அரசியல்!

Published

on

Loading

பிரபாஸ் உடன் என்னை தொடர்புபடுத்தி பேச காரணம் என் அண்ணன் தான்.. ஆட்டம் காணும் ஆந்திர அரசியல்!

தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் குடும்ப அரசியல் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆந்திராவை பொருத்தவரைக்கும் ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் தனித்தனி கட்சிகளில் இருப்பது அங்கு பிரச்சனையாக இருக்கிறது.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஒஎஸ்ஆர் காங்கிரஸில் இருக்கிறார். அவருடைய தங்கை ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். இவர்களுக்குள் அரசியல் ரீதியாக பல பிரச்சினைகள் இருக்கின்றன.

Advertisement

இதற்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை ஷர்மிளா மீடியாக்களுக்கு பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதில் தன்னுடைய அண்ணன் ஜகன்மோகன் ரெட்டி மீது பெரிய குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருக்கிறார். கடந்த பத்து வருடங்களாக எனக்கும் நடிகர் பிரபாஸுக்கும் தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரப்பப்படுகிறது.

இதற்கு காரணமே ஜகன்மோகன் ரெட்டி தான். அவர் தன்னுடைய ஆட்களை வைத்து சமூக வலைத்தளங்களில் இந்த செய்தியை பரப்ப வைத்தார். என் பிள்ளைகள் மீது சத்தியமாக சொல்கிறேன் நான் நடிகர் பிரபாஸை நேரில் கூட பார்த்தது இல்லை.

இந்த பிரச்சனை ஆரம்பிக்கும்போதே ஜகன்மோகன் ரெட்டி தான் முதலமைச்சராக இருந்தார். அவருடைய ஆட்சியில் ஏன் இது குறித்து எந்த புகார் எடுத்துக் கொள்ளப்படவில்லை என தன்னுடைய சொந்த அண்ணன் மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டி இருக்கிறார் ஷர்மிளா.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன