Connect with us

ஹாலிவுட்

விஜய், டிரம்ப் யாரையும் விட்டு வைக்கல.. எல்லை மீறி அசர வைக்கும் அஜித் ரசிகர்கள்.. யாருப்பா நீங்கலாம்?

Published

on

Loading

விஜய், டிரம்ப் யாரையும் விட்டு வைக்கல.. எல்லை மீறி அசர வைக்கும் அஜித் ரசிகர்கள்.. யாருப்பா நீங்கலாம்?

அஜித்குமாரின் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு தொந்தரவு செய்து வருவதற்கு விமர்சனம் குவிந்து வருகிறது.

மற்ற எல்லா துறைகளைக் காட்டிலும் சினிமாவின் மீது இளைஞர்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது. அதனால் நடிகர்கள், நடிகர்கள் பற்றி தகவல்கள், அவர்கள் நடிக்கும் படங்களின் அப்டேட் கேட்பது ரசிகர்களின் வழக்கமான ஒன்றுதான். இது எல்லா நடிகர்களின் ரசிகர்களுக்குமே நடக்கும்.

Advertisement

ஆனால், உச்ச நட்சத்திரமான அஜித்குமாரின் ரசிகர்கள், இந்த இடம் அந்த இடம் என்றில்லாமல் பார்க்கும் இடமெல்லாம், போகும் இடமெல்லாம் அஜித் நடித்து வரும் படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சி வருவதால் பலரும் கடுப்பை வரவழைப்பதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

அஜித்குமார் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் படத்தில் நடித்து வரும் நிலையில், ஏற்கனவே மகிழ்திருமேனி இயக்கத்தில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளார். வெளிநாட்டிலும், உள் நாட்டிலும் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.

அதன்பின், இப்படத்தின் அடுத்த அப்டேட், இப்படம் எப்போது வெளியாகும்? டிரைலர், டீசர் எப்போது ரிலீஸ்? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 2021ல் சென்னை வந்த பிரதமர் மோடியிடம்அப்டேட் கேட்டனர் ரசிகர்கள். வலிமை படத்தில் அப்டேட் கேட்டு, மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஆஸ்., வீரரிடமே அப்டேட் கேட்டு வம்பிழுத்தனர், இணையதளத்தில் ட்ரெண்டிங் செய்தனர் அஜித் ரசிகர்கள்.

Advertisement

அதேபோல், தற்போது அஜித் நடித்துள்ள விடாமுயற்சியில் அப்டேட்டை ஓயாமல் கேட்டு வருகின்றனர். சமீபத்தில் அமெடிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்டிருந்தனர். சமீபத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போது, கடவுளே அஜித்தே கூச்சலிட்டு அவருக்கு இடையூறு செய்தனர்.

ஒரு நடிகரின் ரசிகர்களாக இது ரசிகர்களின் ஆர்வமாக இருந்தாலும் இதை எல்லா இடத்திலும் கேட்க வேண்டுமா? மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கும் விதத்தில் நடக்க வேண்டுமா? பட வேலைகள், அதன் அப்டேட் பற்றி படக்குழுவுக்கு தெரியும் அல்லவா? அப்புறம் ஏன் ரசிகர்கள் மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என சினிமா விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், கமல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான அமரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 31 ஆம் தேதி வெளியான நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் மரணம் அடையும் காட்சியிலும் கூட அஜித் ரசிகர்கள் தியேட்டரில், கடவுளே அஜித்தே என கூச்சலிட்டு படம் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்தனர்.

Advertisement

ஒரு தேசப்பற்றுள்ள ராணுவ வீரரின் படத்தில் அவர் வீரமரணம் அடையும் காட்சியில் எல்லோரும் அழும்போது அஜித் ரசிகர்கள் ஏன் இப்படி நடந்து கொண்டனர்கள் என கேள்வி எழுந்துள்ளது. விரைவில் தன் ரசிகர்களின் செயலுக்கு அஜித் ஒரு அறிக்கை வெளியிட்டு அவர்களை கண்டிப்பார் என தெரிகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன