இந்தியா
TVK : தவெகவில் இணைந்த ‘வாழை’ பட நடிகர்.. வாழ்த்து தெரிவித்த கட்சியினர்!

TVK : தவெகவில் இணைந்த ‘வாழை’ பட நடிகர்.. வாழ்த்து தெரிவித்த கட்சியினர்!
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை துவங்கி தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். விஜய் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தி அதில் அவர் பேசிய பிறகு அவர் தொடர்பான பேச்சுகள் தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இருந்துவருகிறது.
இவரின் அரசியல் வருகை தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளை வீழ்ச்சியடையவைக்கும் என பரவலாக பேச்சுகள் இருந்துவருகிறது. அதேபோல், விஜய்யால் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் சரிவடையும் என்றும் பேச்சுகள் இருந்துவருகிறது.
விஜய், தனது மாநாட்டில் “திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள்” என தெரிவித்த பிறகு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்.
அதேசமயம், சமீபகாலமாக நாம் தமிழரில் இருந்து பல உறுப்பினர்கள் வெளியேறி மாற்றுக் கட்சியிலும் இணைந்துவருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தவெகவினரும் கட்சி உறுப்பினர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
#JUSTIN
‘வாழை’ படத்தில் சிவனைந்தனாக நடித்த பொன்வேல் தவெக-வில் இணைந்தார் #Vaazhai #Sivanaithan #ponvel #TVK #Vijay #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/HwHOkAGrBh
இந்நிலையில் இந்த ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘வாழை’ படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சூப்பர் ஹிட் அடித்தது.
இதில், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் உள்ளிட்ட பல சிறப்பான நடிகர்கள் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சிவனைந்தன் கதாபாத்திரத்தில் நடித்த பொன்வேல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பல முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தனது நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் தான், பொன்வேல் தற்போது விஜய்யின் தவெகவில் இணைந்துள்ளார். இவருக்கு அக்கட்சியினர் தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.