உலகம்
இங்கிலாந்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பலர் பாதிப்பு!

இங்கிலாந்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பலர் பாதிப்பு!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில் பதிவாகும் மழை வீழ்ச்சி ஒரு மணி நேரத்தில் கொட்டித் தீர்த்ததையடுத்து, மத்திய மற்றும் தெற்கு இங்கிலாந்தில் வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை , அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பல பாடசாலைகளை மூடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் லண்டனில், ஏ.எப்.சி விம்பிள்டனின் காற்பந்து ஆடுகளம் வெள்ளத்தால் மூழ்கி நீர்த்தொட்டி போல காட்சி அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)