உலகம்
இங்கிலாந்தில் தமிழர்கள் கைது!

இங்கிலாந்தில் தமிழர்கள் கைது!
பிரித்தானியாவில் விசா இன்றி பணியாற்றுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது தமிழர்கள் உட்பட விசா இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சுற்றுலா விசாவில் சென்று அதற்கான கால எல்லை நிறைவடைந்த போதும் பணியாற்றியவர்கள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் சிலர் பிரித்தானிய அரசாங்க சட்டங்களுக்கு எதிரான முறையில் பணியாற்றியமை தொடர்பில் குடிவரவு அதிகாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதற்கமைய சிலர் நாடு கடத்தலையும் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக பிரித்தானியாவில் குடியேற்ற சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், புகலிடம் கோருவோரை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.