உலகம்
பனிப்பொழிவால் மூழ்கியிருக்கும் தென்கொரியா.. திக்குமுக்காடும் மக்கள்..!

பனிப்பொழிவால் மூழ்கியிருக்கும் தென்கொரியா.. திக்குமுக்காடும் மக்கள்..!
தென்கொரியாவில் இரண்டாவது நாளாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் தெருக்கள், சாலைகள், வீடுகள் என காணும் இடம் எங்கும் வெண்போர்வை போர்த்தியது போல பனிப்படர்ந்து காணப்படுகிறது. தலைநகர் சியோல் அருகேயுள்ள யோங்கினில் சாலை முழுவதும் 40 சென்டி மீட்டர் உயரத்திற்கு பனிக்கட்டிகள் கிடப்பதால், வாகனத்தை இயக்க முடியாமல் மக்கள் சிரமம் அடைந்தனர். மணலில் சிக்கிய வாகனங்களை போல, ஆங்காங்கே கார்கள் நகர முடியாமல் பரிதவித்தன.
இதற்கிடையே சியோல் உள்பட அந்த நாட்டின் சர்வதேச விமான நிலையங்கள் முழுவதுமாக மூடப்பட்டதால், 140 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 1907 ஆம் ஆண்டு முதல் அங்கு பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அதன் படி தற்போது 3-வது மிகப்பெரும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.