Connect with us

இந்தியா

புதுச்சேரி: கேட்பாரற்று கிடந்த விலை உயா்ந்த செல்போன்; ஒப்படைத்த மாற்றுத்திறனாளிக்கு போலீசார் கவுரவிப்பு

Published

on

Puducherry police honored disabled person who handed over coslty mobile phone Tamil News

Loading

புதுச்சேரி: கேட்பாரற்று கிடந்த விலை உயா்ந்த செல்போன்; ஒப்படைத்த மாற்றுத்திறனாளிக்கு போலீசார் கவுரவிப்பு

புதுச்சேரியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த விலை உயா்ந்த செல்போனை காவல் துறையினரிடம் ஒப்படைத்த மாற்றுத்திறனாளியை போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.புதுச்சேரியைச் சோ்ந்தவா் குணசேகரன். மாற்றுத்திறனாளி இவா், மரப்பாலம் பகுதி நூறடிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் விலை உயா்ந்த செல்போன் கிடந்துள்ளது. இதனைப் பாா்த்த குணசேகரன்,செல்போனை எடுத்துச் சென்று சைபர் க்ரைம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தாா்.இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, கைப்பேசி உரிமையாளரை அடையாளம் கண்டனா். அதன்படி, கைப்பேசியானது புதுச்சேரியில் வங்கியில் பணிபுரியும் ஹரி என்பவருடையது என தெரியவந்தது. அவரை வரவழைத்த போலீஸாா், குணசேகரன் முன்னிலையில், அதை ஹரியிடம் ஒப்படைத்தனா்.மேலும், மாற்றுத்திறனாளியாளரான குணசேரகனின் பண்பை பாராட்டும் வகையில், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் அவருக்கு பொன்னாடை போா்த்தி கரவித்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகிய மக்கள் மத்தியில் வரவேற்பை  பெற்று வருகிறது. செய்தி: பாபு ராஜேந்திரன்  -புதுச்சேரி.  “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன