இந்தியா
CAIIB வங்கித் தேர்வு ஒத்திவைப்பு – மீண்டும் தேர்வு எப்போது?

CAIIB வங்கித் தேர்வு ஒத்திவைப்பு – மீண்டும் தேர்வு எப்போது?
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதையொட்டி, சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்பட்டுள்ளது.
இதேபோல், நாளை (டிச.1) நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தின் இளநிலைத் தேர்வுகள் டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, பாரதிதாசன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் நாளை (டிச.1) நடைபெற இருந்த CAIIB வங்கித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மையத்திலும் மட்டும் நாளை தேர்வு நடைபெறாது என்றும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று IIBF தெரிவித்துள்ளது.
இதனிடையே, கனமழையால் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவையும் நிலைமை சீராகும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கினாலும், மெட்ரோ ரயில் நிலையப் படிகள் மற்றும் லிஃப்டுகளை பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.