Connect with us

இலங்கை

இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறப்பு

Published

on

Loading

இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும்இ காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்ததுள்ளது.

கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதுடன் வடக்கின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனால் பெருமளவான வெள்ள நீர் வெளிவேறி மக்கள் குடியிருப்புக்கள்இ விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்வதால் பலரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் இடைத்தங்கள் முகாம்களிலும்இ உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில்ஆயித்து 43 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 524 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

அத்துடன் வட்டக்கச்சி ஊடாக கண்டாவலை செல்லும் பிரதான வீதியில் புளியம்போக்கனை பகுதியில் வீதி குறுக்கரத்து வெள்ளம் பாய்வதன் காரணமாக பெரியகுளம் வட்டககச்சி செல்லும் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன